An Autonomous Institution affiliated to Madurai Kamaraj University (AISHE ID: C-36540)

Department Of Tamil


Profile

BRIEF HISTORY

மதுரைக் கல்லூரி தமிழகத்தில் மிகவும் பழமையான கல்லூரிகளில் ஒன்று. இது 1889ஆம் தொடங்கப்பட்டது. பழமை வாய்ந்த மதுரையின் அடையாளம். 133 ஆண்டுகளாக கல்விப்பணியை ஆற்றிவரும் மதுரைக் கல்லூரியின் பழமையான துறையாக முதுகலைத் தமிழ்த்துறை விளங்குகிறது. மகாகவி பாரதியாரின் காலடித் தடம்பட்ட பெருமையுடைய எம் கல்லூரியின் தமிழ்த்துறையில் பரிதிமார்கலைஞரின் பேரன் முனைவா் கா.கோவிந்தன், பட்டிமன்றப் புகழ் தா.கு.சுப்பிரமணியன் முதலான ஆளுமைகள் பணியாற்றிய பெருமையுடைத்து. 1889 ஆம் ஆண்டு பகுதி - I தமிழ் பயிற்றுவிக்கும் துறையாக தொடங்கப்பட்டது தமிழ்த்துறை. தொடா்ந்து 1989 ஆம் ஆண்டு முதுகைலைத் தமிழும், 2002 ஆம் ஆண்டு முனைவா்ப்பட்ட ஆய்வுப் படிப்பும் தொடங்கப்பட்டு தமிழ் உயராய்வு மையமாக உயா்ந்தது. பிறகு சுயநிதிப்பிரிவில் 2004 ஆம் ஆண்டு இளநிலை ஆய்வுப் படிப்பும், 2012 ஆம் ஆண்டு இளங்கலைத் தமிழும் தொடங்கப்பட்டுச் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இத்துறையில் பயின்ற மாணவா் பலா் அரசுப் பள்ளி ஆசிரியா்களாகவும், கல்லூரிப் பேராசிரியா்களாகவும், போட்டித் தோ்வில் வெற்றிபெற்றுப் பல்வேறு அரசுப் பணிகளிலும் பணியாற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

தமிழ்த்தாத்தா என்று புகழப்பெறும் உ.வே.சாமிநாதையருக்கு ஆசிரியராகத் திகழ்ந்த இராகவையர் தமிழாசிரியராகப் பணியாற்றிய பெருமையுடையது. தமிழ்க்கவிதைகளைப் புதிய பாதையில் முன்னெடுத்த பாரதியாரின் காலடித் தடம் பட்ட கல்லூரி. தமிழ் இலக்கண, இலக்கியங்களைத் தனித்த நிலையில் கற்கும் வகையில் 2012ஆண்டில் சுயநிதிப் பிரிவில் இளங்கலைத் தமிழ்த்துறை தொடங்கப்பெற்றது.

Vision (இலக்கு)

தமிழ்மொழியின் செவ்வியல் பண்புகளையும் இலக்கிய, இலக்கணச் செல்நெறிகளையும் உணரச்செய்து, தமிழ்ப்பண்பாட்டின் வாழ்வியல் மதிப்புகளில் மேம்பட்டவர்களாகத் திகழச் செய்வது இலக்காக அமைகிறது.

MISSION

  • இலக்கிய வகைமைகள், வடிவங்கள், மரபிலக்கணத்தின் தன்மைகள் போன்றவற்றின் அடிப்படைகளை விளக்குதல்.
  • படைப்புகளின் உள்ளடக்கங்கள் அவற்றின் பொருண்மைகளை ஆராயும் மனப்பாங்கினை வளர்த்தல்.
  • இலக்கிய, இலக்கண மரபுகளைப் பல்துறை ஆய்வுக்களங்களோடு கண்டறியும் திறன்களை ஊக்குவித்தல்.
  • வரலாற்றுப் பின்புலங்களுடன் மொழியின் பரிணாமங்களை நுணுகி ஆய்ந்துணரும் அறிவினை உருவாக்குதல்.

PROGRAMMES OFFERED

Name of Programme Year of Affiliation
Part I Tamil 1889
B.A. (SF) 2012
M.A. (Aided) 1989
Ph.D. (Aided) 2002

CLUB/ASSOCIATION (AIDED STREAM)

Name of the club: அங்கயற்கண்ணி செந்தமிழ் மன்றம்

Objectives:

மாணவா்களின் பக்தி இலக்கிய ஆளுமையை மேம்படுத்துதல், மாணவா்களின் கலைத் திறமையை மேம்படுத்துதல்.

Activities:

(Brief the activities being carried out under the club in general) அருள்நெறிக்கலை சான்றிதழ் வகுப்பு, முத்தமிழ் விழா.

CLUB/ASSOCIATION (SF STREAM)

Name of the club: சொற்களம் (இலக்கிய வட்டம்)

Objectives:

அவை அச்சத்தைக் களைதல். மேடை ஆளுமையை வளர்த்தெடுத்தல்.

Activities:

S.No Date(s) Title of the Programme Sponcered by
1 08-09-2022 நூல்வெளி
Literary review
மதுரைக்கல்லூரி வாரியம்
209-03-2023 பட்டிமன்றம்
Debate
மதுரைக்கல்லூரி வாரியம்

FUTURE PLAN

  • ISSN இதழ் தொடங்குதல்.
  • அனைத்துத் துறை மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்கு இடையேயான கலைப் போட்டிகளை நடத்துதல்.
  • பிற இலக்கிய அமைப்புகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்தல்.
  • தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப மாணவா்களைத் தயார் செய்தல்.